Monday, February 9, 2009

நான் கடவுள்-பாலாவின் சவுக்கடி

முதலில் பாலா அவர்களுக்கு ஒரு ராயல் வணக்கம்.

சினிமாவை சவர கத்தியாய் பயன்படுத்தாமல் போர்வாளாய் மாற்றியதற்கு

பாலா இந்த படத்தை தொடங்கும் முன்
ஓஷோ, பெரியார், விவேகந்தார் அன்னை தெரசா, இவர்களோடு கதை விவாதம் பண்ணி இருபரோ? என என்ன தோன்றும் கதைக்கரு! போலி ஆன்மிகம், நாத்திகம், புரட்சி, அன்பு என்று ரெண்டு மணிநேர சொற்பொழிவே நடத்தி தமிழ்த்திரைக்கு அருளுரை பொழிந்திருக்கும் பாலாவிருக்கு துணையாய் ஜெயமோகன், இளையராஜா, ஆர்தர் வில்சன் மற்றும் நடிப்புலக பெருமக்கள்.

படம் தொடக்கம் முதல் முடிவு வரைபாலாவின் கோபம், குசும்பு, நையாண்டிகு பஞ்சமில்லாத கதைக்கு கையில் கிடைத்த பொம்மைகள்! ருத்ரன் ( ஆர்யா ) அம்சவல்லி ( பூஜா ) முருகன், ( வடிவேலு காமெடி குழுவில் இருக்கு கிருஷ்ணமூர்த்தி ) வில்லன ராஜேந்திரன் மற்றும் Physically Challanged and Disables ! வெள்ளகாரனுக்கு நன்றி ! இவர்களை நம் தாய் தமிழில் எப்படி சொன்னாலும் மனம் கனக்கிறது , அதுவும் இந்த படம் பார்த்த பின்பு இன்னும்.......இவர்களை பாலா கையாண்ட விதம் தமிழ்க்கும் திரைக்கும் புதுமை.

நம் தினமும் கடக்கும் ரோட்டில், கூடி கும்மியடிகும் தெருமுனைகள், பள்ளி வாசல்கள், மாதகோவில் மணிக்கூண்டு, சிக்னல்கள், நமக்கு பழக்கப்பட்ட இடங்களில் அழுக்கு முகமும், சடைபோட்ட தலைமுடி, நிர்வாணத்தை மறைக்க வழியில்ல பெரியவர், கண்பார்வை இல்ல சிறுமி, பால்குடி மறவா குழந்தை, என்று நமக்கும் இந்த உலகதிற்கும் சம்மதம் இல்லாதது போல் சுற்றிதிரியிம்? நாங்களும் மனித இனம் தான் என்று சொல்லாமல் வாழும் மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் நெளிவு சுளிவு வேதனைகள் தன் இந்த நான் கடவுள்.

ஆர்யாவின் அர்ப்பணிப்புக்கு நிச்சியம் கூலி உண்டு, இவருடைய கம்பீரம், குரல், உடல்மொழி ! அருமை தமிழ் சினிமாவிருக்கு கிடைத்த இன்னொரு ரியல் நாயகன் ஆர்யா என்று டைட்டில் மட்டுமே படத்தில்ருத்ரன் தன் தெரிகிறார் Well done Arya.

அம்சவல்லி சாரி பூஜாவின் நடிப்பும் பிரமாதம் இறுதி காட்சியில் அக்மார்க் பாலா திருவிளையாடல், பூஜா பல விருதுக்கு சொந்தகாரி ஆகலாம்.

முருகனை வரும் கிருஷ்ணமூர்த்தி சிறந்த தேர்வு அப்பப்ப இவர்க்குள் இப்படி ஒரு நடிகனா? நன்றி பாலாவிருக்கு

அய்யா கவிஞர் விக்கிரமாதித்ய‌ன் பிச்சைக்காரனாக வாழ்ந்து இருக்கிறார், திருநங்கை நிம்மல் கதாபத்திரம் காண கச்சிதம் சில இடங்களை கைதட்டல் பெரும் நடிப்பு, இவர்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் உடல் ஊனமுற்றோர், மன நலம் குன்றியவர்கள் கலைஞகர்களின் பாத்திரம் Highlight for the film எலி என்று சிறுவன் அடிக்கும் லூட்டி, சிரிக்கவும் முடியவில்லை, அழவும் முடியவில்லை, உணமையான நகைசுவைக்குள் ஒரு மெல்லிய வலி இருக்கும் என்பதற்கு சான்று எலியின் காமெடி!? பாலாவின் கடவுள் இவர்கள் தான் குறிப்பாக இவர்கள் அறிமுகம் ஆகும் பிட்ச்சைபாத்திரம் பாடல் வார்த்தையால் எழுது முடியாத ரணம் பாலாவின் கவிதை.....

காசியில் தொடங்கி காசியில் முடியும் கதையை ஒளி ஓவியம் திட்டிய Arthar wilson சில இடங்களை மின்னுகிறார் பல இடங்களை பின் தங்குகிறார் நிறைய இடங்களில் காட்சிகள் கண்ணை உறுத்துகிறது, கோர்ட் காட்சிகள் ஆர்யா வீட்டு காட்சிகள் - மலையாளம் நெடி lack of lighting இருட்டு மட்டும் தான் சிறந்த ஒளிபதிவா என்ன? எடிட்டிங் பல இடங்களில் தன்னிலை மறந்து பயணிக்கிறது Suresh urs தான் எடிட்டர் என்று சொன்னாலும் நம்பமுடியவில்லை உலக படம் ? எடுக்க முயற்சிக்கும் பாலா இந்த பகுதிகளை கவனிக்க மறந்து என் என்று புரியவில்லை

படத்தின் உயிர் பாலாவின் காட்சிமைப்பு உடல் ஊனமுற்றோர் மன நலம் குன்றியவர்கள் யதார்த்தநடிப்பு - இளையராஜாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் ஆர்யா அறிமுக சமஸ்கிரத பாடல் ஓம் சிவா ஒம் திரைஇசையில் ஒரு மைல்கல் உடுக்கை, உருமி, சொலோகம், மணி சத்தம் இரண்டாம் சரணம் முன் இசையில் tabala இசை சிவலோகம் சென்று வந்த பிரமிப்பு ! பிட்ச்சைபாத்திரம் - ராஜாவால் மட்டும் எட்டமுடிந்த சிகரம் - வெறும் பாத்திரம் உள்ளது என்னிடத்தில், அதன் சூத்திரமோ உன்னிடத்தில் ஒரு முறையா ? இரு முறையா ? பலமுறை பல பிறப்பு எடுக்குவைத்தாய் - இந்த இடத்தை கவிஞர் இளையராஜா பின்னுகிறார் பாரதியின் நெருப்பு வரிகள், கண்ணதாசனின் சிந்தனை. பின்னணி இசையில் இன்றைய இசை அமைபாளர்களுக்கு பாடம் நடத்தியுள்ளர், மனிதர்கள் பேசுவது இயல்பு வயலின் பேசுவது!? ஆம்! ராஜாவின் வயலின் சோகத்தை சுமையை பிரிவை கோபத்தை பேசுகிறது,சண்டை மற்றும் இறுதி காட்சியில் ராஜாவின் ருத்தரதண்டவம்....

பாலா என்ற சிற்பி வடித்த நான் கடவுள் என்று சிலைக்கு உயிர்தந்த பிரம்மன் - இளையராஜா என்றால் அதில் துளியும் மிகையில்லை ராஜாவை விமர்சிக்கும் அறிவுஜீவிகளுக்கு - சின்ன பசங்களா... யாருகிட்ட? என்று கமல் சொல்லும் வசனம் தான் ஞாபகம் வருது ! தேசிய விருது தந்தாலும் தராவிட்டாலும்? இந்த படத்தில் மக்கள் மெய்மறந்து கைதட்டல் தரும் இடங்கள் பல- சங்கீத கவிக்கு கிடைத்த மிக பெரிய விருது ! இது தான்.

படத்தின் இன்னொரு தூண் ஜெயமோகன் அவர்களின் வசனம் நயந்தாரா, இன்றய ரீல் ஹிரோகள், போலி சாமியார், அரசியல்வாதி, அம்பானி, ஏன்? எந்த சாமியையும் விட்டுவைக்கவில்லை இவரின் பேனா, இறுதி காட்சியில் பூஜாவின் நடிப்பை தாண்டி வெல்கிறது இவரது எழுத்து, ஆனால் பூஜா கடவுளை (ருத்ரனை) பார்த்து கேட்கும் கேள்விகளுக்கு ?இஸ்லாமியார், கிருத்துவர், இந்து என்ற எந்த மதம் போற்றும் மனிதனிடமும் பதில் இல்லை! சபாஷ் ஜெயமோகன் சார் .

பூமியில் சாமி என்று ஒன்று இருந்தால் வந்து பதில் சொல் லுங்க ப்ளீஸ்!!

இதுவே பாலாவின் வெற்றி தான் கூற வந்த கருத்துக்களை கமர்சியல் சினிமா என்ற மாயவலைகுள் சிக்காமல் .. இயலாதவர்களின் 'வலி'மையை சமூகத்திற்கு நகைச்சுவை, சோகம், பக்தி, வெறி, கோபம்.. என்று செதுக்கிஇருக்கிறார்.

நிலவில் இருக்கும் சிறுகறை போல Techincally சில குறை இருந்தாலும் பாலாவின் படைப்பு

தமிழ் சினிமாவின் பெருமை தமிழர்களின் பெருமை

நான் கடவுள் - அனைவரும் தரிசிக்கவேண்டியவர்